அமெரிக்காவின் தாக்குதல் மூலமாக இடைக்கால நிம்மதியை பெறலாம் அல்லது எண்ணெய் போர் வெடிக்கலாம் என கனடாவின் முன்னாள் ராணுவத் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் டாம் லாசன் (Retd. Gen. Tom Lawson) எச்சரிக்கிறார்.
ஈரானின் நடன்ஸ் (Natanz), போர்டோவ் (Fordow), மற்றும் இசுபாகான் (Isfahan) அணு மையங்களை 30,000 பவுண்ட் பர்கர்-பஸ்டர் குண்டுகளால் அமெரிக்கா தாக்கியுள்ளதால், இது இஸ்ரேல்-ஈரான் மோதலை மிகவும் மோசமாக்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) இந்த தாக்குதல் முற்றிலும் வெற்றி எனக் கூறினாலும், பண்டகன் (Pentagon) தரவுகள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.
ஈரான் “Strait of Hormuz” ஆழ்கடல் வழியை மூடுவதால், உலக அளவில் எண்ணெய் போர் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், அமெரிக்கா எதிர்பாராதவிதமாக இன்னும் ஆழமாக இம்மோதலில் இழுக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் கனடாவின் முன்னாள் ராணுவ தளபதி லாசன் கூறியுள்ளார்.