
போர்நிறுத்தம் வேண்டுமா அல்லது போர் வேண்டுமா என்பதை அமெரிக்காவே தேர்வு செய்ய வேண்டும், ஏனெனில் இரண்டும் ஒன்றாக நடக்க முடியாது என இரான் வெளியுறவு அமைச்சர் “அப்பாஸ் அராக்சி” தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இரான் – அமெரிக்க போர்நிறுத்தத்தின் நிபந்தனைகள் தெளிவாக இருக்கின்றன. போர்நிறுத்தம் அல்லது இஸ்ரேலின் நீடித்த போருக்கு இடையே அமெரிக்கா ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் இரண்டும் ஒன்றாக நடக்க முடியாது.” என்றார்.
மேலும், “லெபனானில் நடைபெற்று வரும் படுகொலையை உலகமே பார்த்து வருகிறது. இப்போது முடிவு அமெரிக்காவின் கைகளில் தான் இருக்கிறது. அமெரிக்கா அதன் உத்தரவாதங்களின்படி நடக்கிறதா? அல்லது இல்லையா? என்பதை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு அதனை ஆதரித்த இஸ்ரேல் அது ‘லெபனானுக்குப் பொருந்தாது” என்றும் அறிவித்தது.
எனினும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், இந்தப் போர்நிறுத்தம் லெபனானிலும் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

