அனைத்து நாடுகளின் பொருட்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சா்ச்சைக்குரிய பரஸ்பர வரி விதிப்பு அமுலுக்கு வந்துள்ளது.
இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
சா்வதேச நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு ட்ரம்ப் அறிவித்துள்ள அடிப்படை 10 சதவீத பரஸ்பர வரியை அதிகாரிகள் வசூலிக்கத் தொடங்கியுள்ளனா்.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுங்கக் கிடங்குகள் ஆகியவற்றில் புதிய பரஸ்பர வரி வசூலிக்கப்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதற்கிடையே, ட்ரம்ப்பின் இந்த வரி விதிப்புக்கு எதிர்வினையாற்றுவது குறித்து பிற நாடுகளின் தலைவா்களுடன் ஆலோசிக்க பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டார்மா் முடிவு செய்துள்ளார். அவுஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி அல்பனேசி, இத்தாலி பிரதமா் ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடியதற்குப் பிறகு அவா் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, ட்ரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்குப் பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்கள் மீதும் வரும் 10ஆம் திகதி முதல் 34 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படுவதாக சீனா நேற்று முன்தினம் (4) அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.