Toronto மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மார்ச் 02 அதிகாலை அபூர்வமான “Blood Moon” எனப்படும் முழு சந்திர கிரகணத்தைக் கண்டனர்.
அதிகாலை 3:45 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்வு, சுமார் ஐந்தரை மணி நேரம் நீடித்தது.
அதிகாலை 4:50 மணிக்குத் தொடங்கிய பகுதி நேர கிரகணத்தைத் தொடர்ந்து, 6:00 மணி முதல் 6:52 மணி வரை சந்திரன் அடர் சிவப்பு நிறத்தில் (Blood Moon) காட்சியளித்தது.
சந்திர கிரகணத்துடன் சேர்த்து, தற்போது வானில் Mercury, Venus, Saturn, Uranus, Neptune மற்றும் Jupiter ஆகிய கோள்களும் ஒரே வரிசையில் தோன்றும் ‘கோள்களின் அணிவகுப்பு’ (Planetary parade) நிகழ்வும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வைத் தவறவிட்டவர்கள், மீண்டும் Toronto-வில் முழு சந்திர கிரகணத்தைக் காண ஜூன் 26, 2029 (June 26, 2029) வரை காத்திருக்க வேண்டும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

