14.7 C
Scarborough

அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் காயம்

Must read

அனுராதபுரம் ஏ-9 வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் யாழ்ப்பாணம் – சாகவச்சேரியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளதுடன் விபத்தின் காரணமாக குறித்த நபரின் கால் அகற்றப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பாரவூர்தி வேகக் கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பாரவூர்தி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சைகளின் போது அந்த நபரின் கால் அகற்றப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து அனுராதபுரம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article