ஜனாதிபதி அநுரவால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில், பெயர்ப் பலகைகளில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்ததுடன், ஜனாதிபதியின் பெயர் அவற்றில் இடம்பெறவில்லை.
கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளின்போது, பெயர்ப் பலகைகள் மற்றும் நினைவுக் கற்களில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தமிழ்மொழிக்கு இரண்டாம் இடம் கொடுக்கப்படுவதும், இடம் மறுக்கப்படுவதுமே வழமையாகும். இந்த நிலையில், ஜனாதிபதி அநுர ஆரம்பித்து வைத்த அபிவிருத்தித் திட்டங்களில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன், ஜனாதிபதி அநுரவின் பெயர், பெயர்ப்பலகைகளில் இடம்பெறவில்லை. ‘ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது’ என்றும்.’ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது’ என்றுமே குறிப்பிடப்பட்டிருந்தது. இவற்றைவிட, ‘பொதுமக்களின் நிதியில்’ இந்த அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது. இவை மிக முக்கியமான விடயங்களாகப் பார்க்கப்படுகின்றன.