13.8 C
Scarborough

அதி வேகமாக வாகனம் செலுத்தியவர்கள் கைது

Must read

கனடாவின், ஒன்டாரியோ மாகாணம் மிசிசாகா பகுதியில் உள்ள ஹைவே 403 வழித்தடத்தில் அருகில் 200km/h வேகத்தில் ஓடிய இரு வாகன ஓட்டிகள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒன்டாரியோ காவல்துறை (OPP) இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதில் ஒருவர் மதுபானம் அருந்தி வாகனம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முதல் வாகன சாரதி எரின் மில்ஸ் பார்க்வே Erin Mills Parkway அருகே, மற்றும் இரண்டாவது வாகன சாரதி எக்லின்டன் அவன்யூ Eglinton Avenue அருகே, ஒன்றுக்கு ஒன்றாக ஒரு மணி நேரத்திற்குள் தனித்தனியாக பிடிபட்டனர்.

முதல் வாகன சாரதி, வயது 24, ஹைவேவில் 191 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு எதிராக மதுபான அருந்தி வாகனம் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

‘ஸ்டண்ட் டிரைவிங்’, எனப்படும் அதிவேக நாசகார ஓட்டம், போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அவரின் உரிமம் 90 நாட்கள் நிறுத்தப்பட்டு, வாகனம் 14 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது வாகன சாரதி, வயது 37, 188 கிலோமீட்டர் வேகத்தில் ஹைவேவில் பயணித்ததாக கூறப்படுகிறது.

இவரும் ‘ஸ்டண்ட் டிரைவிங்’ குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளாராகினும், மதுபானம் சார்ந்த குற்றச்சாட்டு இவருக்கு இல்லை.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article