17.3 C
Scarborough

அதிவேகமாக வளரும் இந்திய பொருளாதாரம்!

Must read

உல​கில் அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும் என்று மார்​கன் ஸ்டான்​லி​யின் சர்​வ​தேச ஆய்​வறிக்​கை​யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்​கா​வைச் சேர்ந்த மார்​கன் ஸ்டான்லி நிறுவனம் உலக நாடு​களின் பொருளா​தா​ரம் குறித்து வெளி​யிட்ட ஆய்​வறிக்கையில்,

‘ அமெரிக்​கா, ஐரோப்​பிய நாடு​கள் மற்றும் சீனா உள்​ளிட்​டவை தங்​களின் பொருளா​தார வளர்ச்​சியை அதி​கரிக்க அதிக தொகையை செல​விட்டு வரு​கின்​றன. ஆனால் சர்​வ​தேச பொருளா​தார வளர்ச்சி மந்​த​மாகவே இருக்​கிறது. கொரோனா பெருந்​தொற்று காலத்​துக்கு பிறகு சர்​வ​தேச பொருளா​தா​ரம் முழு​மை​யாக மீட்சி அடைய​வில்​லை.” – என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் பல்​வேறு நாடு​கள் மீது அமெரிக்க அரசு வர்த்தக வரி​களை விதித்​துள்​ளது. இதன்​காரண​மாக கடந்த ஏப்​ரலில் அமெரிக்​கா​வின் பொருளா​தா​ரம் பெரும் சரிவை சந்​தித்​தது. இது உலகம் முழு​வதும் பாதிப்​பு​களை ஏற்​படுத்​தி​யது. நடப்​பாண்​டில் அமெரிக்​கா​வின் பொருளா​தார வளர்ச்சி 1.5 சதவீத​மாக இருக்​கும்.

எதிர்வரும் 2026-ம் ஆண்​டில் அந்த நாட்​டின் பொருளா​தார வளர்ச்சி ஒரு சதவீத​மாக இருக்​கும். நடப்​பாண்​டில் அமெரிக்​கா​வில் பண வீக்​கம் 3 சதவீதமாக உள்​ளது. சட்​ட​விரோத குடியேறிகளை அமெரிக்கா வலுக்​கட்​டாய​மாக வெளி​யேற்றி வரு​கிறது. இதன்​காரண​மாக அமெரிக்​கா​வில் தொழிலா​ளர்​களுக்கு பற்​றாக்​குறை ஏற்​படும். இது அந்த நாட்​டின் பொருளா​தார வளர்ச்​சியை மோசமாகப் பாதிக்​கும்.” – எனவும் மேற்படி ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்​தி​யா​வின் ஏற்​றுமதி கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது. அந்த நாட்​டின் உள்​நாட்டு சந்தை அபரிமித​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. இதன்​காரண​மாக உலகளா​விய அளவில் அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும். நடப்​பாண்​டில் அந்த நாட்​டின் பொருளா​தார வளர்ச்சி 5.9 சதவீத​மாக இருக்​கும். வரும் 2026-ம் ஆண்​டின் இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி 6.4 சதவீத​மாக அதி​கரிக்​கும் எனவும் ஆய்​வறிக்​கை​யில்​ கூறப்பட்​டு உள்​ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article