3 C
Scarborough

அதிகமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது – இன்றைய ராசிபலன் – 25.12.2025

Must read

மேஷம்

மார்கெட்டிங் பிரிவினர் முன்னேற்றம் காண்பர். உடல் நலம் தேறும். பிரிந்திருந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள். மணிபர்சில் பண புழக்கம் அதிகரிக்கும். தங்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். கணவன் மனைவி உறவில் இனிமை கூடும். வெளியூர் பயணங்கள் நிகழும்.

அதிர்ஷ்ட நிறம் :ஆரஞ்ச்

ரிஷபம்

பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பெண் நண்பர்கள் அறிமுகமாவர். அவர்களால் பெரிய விசயங்கள் முடியும். கை, கால் வலி வந்துப் போகும். கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனம் தேவை. கல்யாணம் மற்றும் பிறந்த நாள் விழாக்களில் கலநது கொண்டு அங்கு தங்களுக்கு முதல் மரியாதைக் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மிதுனம்

நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. குடும்பத் தலைவிகள் தாங்கள் விரும்பிய கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். சுப காரியம் கைகூடும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கடகம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

சிம்மம்

தம்பதிகள் ஒற்றுமை மேலோங்கும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் வரும். ஆதலால், சித்த மருத்துவத்தை பயன் படுத்துவது நல்லது. வெளி நபர்கள் மற்று யாரிடமும் அதிகமாக பேசுவதை தவிர்ப்பது பல பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வழிவகுக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கன்னி

சக ஊழியர்கள் ஒத்துழைப்பர். கலைஞர்களுக்கு வெற்றி குவியும். வயது முதிர்ந்த பெண்கள் திருமண வாழ்க்கைப் பற்றி முக்கிய முடிவுகள் எடுப்பர். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கணவன்–மனைவி உறவு இனிக்கும். பெண் அதிகாரிகளுக்கு தன் கீழ் வேலை பார்ப்பவர்களிடம் ஒரு கண் வைப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

துலாம்

சகோதரரால் நன்மை உண்டு. பெண் தொழில் முனைவர்களுக்கு தொழிலில் ஏற்றம் நிகழும், சுப காரியங்கள் கூடி வரும். ஆன்மீக யாத்திரை மேற்கொள்வீர்கள். தம்பதிகளிடையே அன்யோன்யம் மிகும். குடும்பத்துடன் விருந்து விழா என கலந்து கொண்டு மகிழ்வீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

விருச்சிகம்

அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும். பெண் உத்யோகஸ்தர்கள்பணியாளர்கள் சுதந்திர மனப்பான்மையுடன் பணியாற்றுவர். உடல் நலத்தில் கவனம் மிகும். காதல் கசக்கும். மாணவர்கள் அதிக மதிப்பெண்களை ஈட்டுவார்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

தனுசு

எதிரிகள் சரணடைவர். பொது நலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். உத்யோகஸ்தர்களுக்கு போனஸ் கிடைக்கும். பெண்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பர். சகோதரிவழியில் உதவி கிடைக்கும். அழகு நிலையங்கள் ஒரு சிலர் திறப்பர். பணவரவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வான்நீலம்

மகரம்

தேவைக்கு ஏற்ப பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் இடையூறு அகலும். கலைஞர்களின் எண்ணங்கள் ஈடேறும். பிள்ளைகளுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும். பெண் தொழிலாளர்களுக்கு தங்கள் கோரிக்கை நிறைவேறும். கை, கால் வலி வந்துப் போகும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கும்பம்

பிள்ளைகளுக்கு குறுகிய அல்லது தொலை தூர பயணம் உண்டு. சுற்றுலா சென்று வருவர். வீட்டில் வெளிநபர் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. கணவன்–மனைவி உறவு தித்திக்கும். எதிரிகள் விலகி ஓடுவார்கள். கூட்டுத்தொழில் ஏற்றம் தரும். கூடுமானவரை திருமணத்தை தள்ளிப் போட வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் :மஞ்சள்

மீனம்

பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். நண்பர்கள் உதவுவர். வீட்டில் சுப விசேஷங்களான காது குத்து, பூப்பெய்தல் விழா என வீடு களைகட்டும். தங்களுக்கு பிடித்தவாறே துணை அமையும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். மாணவர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

dailythanthi

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article