16.1 C
Scarborough

அணு ஆயுத தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை வெற்றி!

Must read

உலகின் எந்த பகுதியிலும் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் மினிட்மேன்-3 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அமெரிக்க விமானப்படை நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது.

அமெரிக்கா கடந்த 1970-ம் ஆண்டே மினிட்மேன் ஏவுகணை திட்டத்தை கொண்டு வந்தது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் திறன் படைத்தது. இந்நிலையில் மினிட்மேன்-3 ஏவுகணையை அமெரிக்க விமானப்படை நேற்று சோதனை செய்தது. இதில் ஆயுதம் இல்லை. இந்த ஏவுகணை மூலம், உலகின் எந்த பகுதி மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தலாம்.

கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் விண்வெளி தளத்திலிருந்து இந்த ஏவுகணை நேற்று ஏவப்பட்டது. இந்த ஏவுகணை மணிக்கு 15,000 மைல் வேகத்தில் பயணித்து, 4,200 கி.மீ தொலைவில் உள்ள மார்சல் தீவின் ரொனால்ட் ரீகன் ஏவுகணை பரிசோதனை மையத்துக்கு சென்றது.

இந்த மார்சல் தீவு, மத்திய பசிபிக் கடலில் அமைந்துள்ள எரிமலைகள் அடங்கிய தீவுப் பகுதி. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.

மினிட்மேன் ஏவுகணைகளுக்கு மாற்றாக எல்ஜிஎம்-35ஏ என்ற ஏவுகணையை கொண்டு வர அமெரிக்க விமானப்படை திட்டமிட்டுள்ளது. அத்திட்டம் நிறைவேறும்வரை மினிட்மேன் ஏவுகணை பயன்படுத்தப்படும்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article