அஜித் – ‘எஃப்.ஐ.ஆர்’ மனு ஆனந்த் இருவரும் இணைந்து பணிபுரிய பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
’குட் பேட் அக்லி’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அஜித். இதன் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் அனைத்துமே ஜனவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு ஜனவரி மாத இறுதியில் தொடங்கும் என தெரிகிறது.
இப்படத்தினை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள படத்தினை இயக்கவுள்ளார் மனு ஆனந்த். இவர் இயக்குநர் கவுதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். ‘எஃப்.ஐ.ஆர்’ மற்றும் ‘மிஸ்டர் எக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இதில் ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. இவர் ’என்னை அறிந்தால்’ படப்பிடிப்பு தளத்தில் அஜித்துக்கு நண்பராக மாறியிருக்கிறார்.
இந்த நட்பை வைத்து அஜித் – மனு ஆனந்த் கூட்டணி உருவாகி இருக்கிறது. இப்படத்தினை யார் தயாரிக்கவுள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை. விரைவில் ‘மிஸ்டர் எக்ஸ்’ வெளியாகவுள்ளது. அதன் பணிகளை முடித்து விட்டு அஜித் நடிக்கும் படத்தின் பணிகளைத் துவங்கவுள்ளார் மனு ஆனந்த்.
HinduTmail

