ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு தடை விதித்த டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியது ஹாவர்ட் பல்கலைக்கழக நிர்வாகம்.
இது சட்ட மீறல் நடவடிக்கை என நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து அமெரிக்க நீதிமன்றம் ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை பிறப்பித்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 29-ம் திகதி நடைபெறவுள்ளது.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் புகழ்பெற்ற ஹாவர்ட் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் மாணவர்களும் உயர்கல்வி பயில்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.