பிரபல ஹாலிவுட் நடிகர் டி.கே.கார்டர் (69). நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில்நடித்து வந்தவர் இவர்.
சிறுவயதிலேயே ‘ஸ்டாண்ட் அப் காமெடியனாக’ வலம் வந்த அவர், பின்னர் நாடகங்களில் நடித்து சினிமாவுக்கு வந்தார். சதர்ன் கம்போர்ட் (1981), திதிங்க் (1982), ரன் அவே டிரெய்ன் (1985), ஸ்பேஸ் ஜாம் (1996), த கார்னர் (2000) உள்படபல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
கலிபோர்னியாவில் வசித்து வந்த இவர், ஜன.9-ம் தேதி காலமானார். இதை அவருடைய செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். அவர் இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

