இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் பலஸ்தீனத்தின் காஸா மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் காஸாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 50,000த்தை கடந்துள்ளது.
கடந்த ஜனவரியில் ஏற்பட்ட போர் நிறுத்தம் மார்ச் உடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து மேலும் 50 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அத்தியாவசிய உதவிகள் காஸாவுக்குள் செல்லாமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது.
இதற்கிடையே கடந்த வாரம் ஹமாஸ் காஸாவில் இருந்து வெளியேற வேண்டும் என ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் வடக்கு காஸாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2007 முதல் காஸாவை ஹமாஸ் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் தற்போது தங்களுக்கு எழுந்துள்ள எதிர்ப்பை ஒடுக்க ஹமாஸ் தீவிரமான அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு பொதுவெளியில் வைத்து சாட்டையடி கொடுக்கப்பட்டதாகவும், 6 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் போரட்டம் நடத்தியவர்களில் பலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.