வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவியை வீடு திரும்ப வசதி செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி, மின் கம்பம் ஒன்றின் மேல் ஏறி போராட்டம் நடத்திய கணவர் ஒருவரை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து, பொலிஸார் அந்த நபரை மின் கம்பத்திலிருந்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குறித்த நபர், தனது மூன்று பிள்ளைகள் சிரமங்களை எதிர்கொள்வதால் மனைவியை வெளிநாட்டிலிருந்து அழைத்து வருமாறு கேட்டுக்கொண்டார்.