19.6 C
Scarborough

வெய்ன் கிரெட்ஸ்கியை பிரதமர் பதவிக்கு போட்டியிடுமாறு ட்ரம்ப கோரிக்கை!

Must read

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனல்ட் ட்ரம்ப் தனது கிறிஸ்துமஸ் தின பயணத்தின் போது கனடாவின் ஹொக்கி பிரபலமான வெய்ன் கிரெட்ஸ்கியை (Wayne Gretzky) கனேடிய பிரதமர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ice-hockey வட்டாரங்களில் ‘The Great One’ என அழைக்கப்படும் வெய்ன் கிரெட்ஸ்கியை கனடாவின் பிரதமர் பதவிக்கு போட்டியிட கோரியதுடன், பிரச்சாரம் இன்றி இலகுவாக கனடாவின் ஆளுநராக வெற்றி பெறலாம் என கூறியதாகவும் ஆனால் வெய்ன் கிரெட்ஸ்கி இற்கு அதில் விருப்பம் கூறவில்லை எனவும் சமூக வலைத்தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டிருந்தார்.

மேலும், தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்த ட்ரம்ப், கனடா அமெரிக்க மாநிலமாக மாறினால் கனேடியர்கள் 60% இற்கும் அதிகமான வரிக் குறைப்பைக் காண்பார்கள் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article