4 C
Scarborough

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் நாள் – இராசிபலன் 27.12.2025

Must read

மேஷம்

வெளிநாட்டுச் செய்தி மகிழ்ச்சி தரும். கொடுக்கல்–வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு வேலை சுமை குறையும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்கிவிடுவர். குடும்பப் பிரச்சினை சீராகும். கணவர்வழியில் உதவிகள் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: கரும் பச்சை

ரிஷபம்

வரவுக்கு சமமாக செலவுகள் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். தேகம் பளிச்சிடும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வைப்புத் தொகையாக வங்கியில் டெபாசிட் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

மிதுனம்

கலைஞர்களுக்கு பாராட்டுக்ள் குவியும். அரசு தொடர்பானவைகளில் லாபம் உண்டு. ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருக்கு நிலம் மற்றும் மனையால் லாபம் வரும். கூட்டுத்தொழிலில் வியாபாரத்தில் நல்லதொரு தொகை கிடைக்கும். தம்பதிகள் தங்கள் தவறை உணர்வர்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

கடகம்

கணவன் – மனைவியிடையே இருந்துவந்த பிணக்குகள் யாவும் தீர்ந்து சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். அன்பு பெருகும். பணப்பற்றாக்குறை வந்தாலும் கடைசியில் தேவையான நேரத்தில் எங்கிருந்தாவது பணம் வந்து சேரும். குடும்பத்தில் அன்னியர்களின் தலையீடு உண்டாகும். அவற்றைத் தடுக்க வேண்டும். திருமண முயற்சி வெற்றி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சிம்மம்

சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது. காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான்.

அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்

கன்னி

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை நம்புங்கள். பற்று வரவு வசூலாகும். உடல் நலனில் கவனம் வேண்டும். நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். வெளி உணவுகளை தவிர்க்கவும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்

நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளால் ஆறுதலடை வீர்கள். உடலில் கை, கால், மூட்டு வலி வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

விருச்சிகம்

நண்பர்கள் மற்றும் விரும்பியவர் தேடி வருவர். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். திட்டமிட்ட செலவுகளை செய்து விடுவீர்கள். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கும். கணவன் மனைவி உறவு மேம்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும். உடல் நலம் பலம் பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

தனுசு

கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். அதிக விற்பனைக்காக வியாபாரத்தை துவங்க புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. தொலைந்து போன பொருள் மீண்டும் வந்தடையும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகரம்

வரவேண்டிய பதவி தேடி வரும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பர். நண்பர்களில் ஒரு சிலரே உங்களிடம் உண்மையான அன்புடன் இருப்பார்கள். அவர்களில் ஒருவரே உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார். இனம் கண்டுவிடுவீர்கள். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம்

நண்பர்களுக்கு உதவி செய்யும் நிலையில்தான் நீங்கள் இருப்பீர்கள். அவர்களும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பார்கள். பண விஷயத்தில் யாரையும் நம்பி இருக்க வேண்டாம். எந்த முடிவாக இருந்தாலும் தாங்களே முடிவெடுத்துச் செயல்படுவது நல்லது. மாணவர்கள் உயர் படிப்பு படிக்க வெளிநாடு செல்வர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

கணவன் மனைவிக்குள் ஒற்றுமை மேலோங்கும். பிள்ளைகள் மேற்படிப்பை துவங்வர். கூட்டுத் தொழிலால் லாபம் வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி தேடி வரும். பங்குச் சந்தை லாபம் தரும். உடல் நலம் பளிச்சிடும். வேலையில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகள் பாராட்டுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article