வின்னிபெக் (Winnipeg) நகரில் உள்ள பாடசாலைகளுக்குத் தொடர்ச்சியாகப் போலி துப்பாக்கிச் சூடு மிரட்டல்களை விடுத்ததாக இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டொராண்டோவைச் சேர்ந்த 30 வயதுப் பெண் மற்றும் 13, 16 வயதுடைய இரு சிறுவர்கள் மீது மிரட்டல் விடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், 10 வயது சிறுவன் ஒருவன் இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளான்.
பெப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் 11 போலி மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இதனால் பல பாடசாலைகளில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக Windsor Park Collegiate பாடசாலை புதன்கிழமை மூடப்பட்டது.
“இது ஒரு நகைச்சுவை அல்ல, மிகவும் பாரதூரமான குற்றச் செயல்” என அதிகாரி Shaun Venn எச்சரித்துள்ளார்.
இத்தகைய செயல்கள் வாழ்நாள் முழுவதும் குற்றப் பின்னணி (Criminal Record) ஏற்படக் காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் Tumbler Ridge பகுதியில் நடந்த உண்மைத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, இத்தகைய போலி மிரட்டல்கள் மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

