9 C
Scarborough

வாதுவையில் ரயில் தடம் புரள்வு!

Must read

பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த சாகரிகா கடுகதி ரயில், இன்று  (24) காலை வாதுவை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தினால் கடற்கரை மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரிய தெரிவித்துள்ளார்.

ரயிலை வழமைக்குக் கொண்டு வர இன்னும் இரண்டு நாட்கள் வரை ஆகலாம்.

தடம் புரண்ட ரயிலுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் எமக்கு பாரிய நட்டமாகும். தற்போது எம்மிடம் ரயில்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்த பாதிப்பை விரைவில் சீர்செய்ய எதிர்பார்த்துள்ளோம்.

பாதிக்கப்பட்ட ரயிலுக்குப் பதிலாக மாற்று ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை செய்யுமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது கொழும்பிலிருந்து வரும் ரயில்கள் பாணந்துறை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. அங்கிருந்து பயணிகள் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் மூலம் களுத்துறை தெற்கு ரயில் நிலையம் வரை அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

களுத்துறை தெற்கிலிருந்து மாத்தறை மற்றும் பெலியத்தை வரையான ரயில் சேவைகள் வழமை போல் முன்னெடுக்கப்படுகின்றன.

இன்று மாலைக்குள் ஒரு தண்டவாளத்தையாவது சீர்செய்து, குறைந்தபட்ச ரயில் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article