பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுள் இதுவரை வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு வெள்ளிக்கிழமைக்குள் அஞ்சல் மூலம் வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படும். அவ்வாறு கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் கிடைக்கப்பெற்ற வாக்காளர் அட்டையில் தவறான தகவல்கள் உள்ளவர்கள் Elections Canada ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 28 பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்களர் அட்டை தேவையானது ஏனெனில் அவை எங்கு, எப்போது வாக்களிக்கலாம் என்ற தகவல்களுடன் முன்கூட்டியே வாக்களிப்பது உட்பட்ட தகவல்களையும் கொண்டுள்ளன. இதைவிட Elections Canada வின் இணையத்தள முகவரிக்கு (https://www.elections.ca) சென்று Voter Information Service box இல் வாக்காளர்கள் தங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளீடு செய்வதன் மூலமும் எங்கு வாக்களிக்கலாம் மற்றும் முன்கூட்டியே வாக்களிக்கும் நிலையம் எங்கு அமைந்துள்ளது போன்ற தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பு நிலையத்தில் உறுதிப்படுத்தல் செயன்முறைக்காக வாக்காளர் அட்டையை பயன்படுத்தலாம் எனினும், வாக்களிப்பதற்கு வாக்காளர் அட்டை கட்டாயமானதன்று ஆயினும், வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்தவும் முகவரியை உறுதிப்படுத்தவும் தேவையான ஆவணத்தை கொண்டிருத்தல் அவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது.