கனடாவுக்கான அமெரிக்க தூதுவர் Pete Hoekstra அமெரிக்கா கனடாவிற்கு இடையிலான தற்போதைய வர்த்தக பேச்சுவார்த்தைகள் மெதுவாக நகர்கின்றதே தவிர நிறுத்தப்படவில்லை என்றும் அதை சீராக கொண்டு வருவதற்கு சில காலம் எடுக்கும் என்றும் கூறுகிறார்.
இன்னும் நிறைய பிரச்சினைகள் மேசையில் உள்ளன அடுத்த சில வாரங்கள் மெதுவாக நகரும் என்று அவர் கூறினார். கனடா தொடர்ந்து முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று Hoekstra வலியுறுத்தினாலும், தற்போது Washington சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தைப் பெறுவதில் அதிக கவனம் செலுத்துகிறது என்று குறிப்பிட்டார்.
கனடாவை அமெரிக்கா நியாயமற்ற முறையில் வரிகளால் குறிவைத்துள்ளது என்ற கருத்தை நிராகரித்த Hoekstra கனேடிய பொருட்களின் மீதான பயனுள்ள வரி விகிதம் குறைவாகவே உள்ளது என்றார். இதனிடையே கனடாவின் பழிவாங்கும் நடவடிக்கைகளையும் அவர் விமர்சித்தார்.
கனடாவுடனான வர்த்தகப் போரை அமெரிக்கா அதிகரித்து வருவதால் மத்திய அரசு ஏமாற்றமடைந்தாலும் அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் அதேநேரம் கனேடிய வேலை வாய்ப்புக்கள் மற்றும் வர்த்தகங்களை பாதுகாக்க மாகாணங்களுக்கு இடையேயான வர்த்தகத் தடைகளை நீக்கி, உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்த தொடர்ச்சியான முக்கிய திட்டங்களை உருவாக்குவதன் மூலம் கனடாவை கட்டியெழுப்புவதில் அதிக கவனமெடுக்கும் என்று Carney கூறினார்.

