17.6 C
Scarborough

வரி விதிப்பு மிரட்டலை அடுத்து… அமெரிக்க-கனடா எல்லை நிர்ணய ஒப்பந்தத்தில் கைவைக்கும் ட்ரம்ப்

Must read

கனடா மற்றும் அமெரிக்கா இடையே வரி விதிப்பு விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான எல்லை நிர்ணய ஒப்பந்தத்தில் தமக்கு நம்பிக்கை இல்லை ட்ரம்ப் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்லை ஒப்பந்தத்தை

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடனான உரையாடலில், இந்த விவகாரம் தொடர்பில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எல்லையை மறு ஆய்வுக்கு உட்படுத்த விரும்புவதாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி மாத தொடக்கத்தில் நடந்த ஒரு தொலைபேசி உரையாடலில், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை ஒப்பந்தத்தை சவாலுக்கு உட்படுத்துய ஜனாதிபதி ட்ரம்ப், பிரதமர் ட்ரூடோவிடம் அவர்களின் பகிரப்பட்ட நீர் ஒப்பந்தங்கள் தனக்குப் பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

சமீபத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில், இன்றைய வரி விதிப்புகளுக்கு ட்ரம்ப் கூறும் ஃபெண்டானில் சாக்குப்போக்கு முற்றிலும் போலியானது, முற்றிலும் நியாயமற்றது, முற்றிலும் தவறானது என்றார்.

அவர் விரும்புவது கனேடிய பொருளாதாரத்தின் முழுமையான வீழ்ச்சி என்பதே, அப்படி ஏற்பட்டால் அது நம்மை அமெரிக்காவுடன் இணைப்பதை எளிதாக்கும் என ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி 3 ஆம் திகதி அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உரையாடலில் கனேடிய ஏற்றுமதிகள் மீதான வரிகளைத் தடுப்பது குறித்த விவாதங்கள் மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவு குறித்து தனக்கு இருந்த குறைகளின் நீண்ட பட்டியலையும் ட்ரம்ப் முன்வைத்துள்ளார்.

கனடாவை வெளியேற்ற ட்ரம்ப் குறிப்பிட்ட எல்லை ஒப்பந்தமானது 1908 இல் நிறுவப்பட்டது மற்றும் அப்போது பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சர்வதேச எல்லையை இறுதி செய்தது.

மட்டுமின்றி, இரு நாடுகளுக்கும் இடையே ஏரிகள் மற்றும் ஆறுகளைப் பகிர்ந்து கொள்வதை மறுபரிசீலனை செய்வது குறித்தும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றை உள்ளடக்கிய ‘ஐந்து கண்கள்’ என்று அழைக்கப்படும் உளவுத்துறை பகிர்வு குழுவிலிருந்தும் கனடாவை வெளியேற்ற ட்ரம்ப் விரும்புவதாக தகவல் கசிந்துள்ளது.

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பையும், குறிப்பாக வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளையையும் அவர் மதிப்பாய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article