10.4 C
Scarborough

வரி விதிப்புக்கு எதிராக தீர்ப்பு – அமெரிக்க நீதிமன்றத்தை அவமதித்தார் ட்ரம்ப்!

Must read

அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி விதித்த வரிகளை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

வரி விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு என நீதிமன்றம் தனது 6-3 என்ற பெரும்பான்மைத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை “நாட்டிற்கே அவமானம்” எனக் கடுமையாக விமர்சித்துள்ள ட்ரம்ப், இதற்குப் மாற்றாக 1974 ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் (1974 Trade Act – Section 122) கீழ், அனைத்து உலக நாடுகளுக்கும் 10 சதவீத வரியை விதிக்கும் புதிய நிறைவேற்று அதிகார நட்டத்தில் கையெழுத்திடப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்த வரி விதிப்பு நடைமுறையிலுள்ள ஏனைய வரிகளுக்கு மேலதிகமாக இருக்கும் என்றும், தேசிய பாதுகாப்பு தொடர்பான அனைத்து வரிகளும் தொடர்ந்து அமுலில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அதிரடி முடிவானது அடுத்த பத்து ஆண்டுகளில் சுமார் $3 ட்ரில்லியன் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article