6.6 C
Scarborough

வரி எதிர்ப்பு விளம்பரம் ஒரு தவறல்ல – வர்த்தக அமைச்சர் விளக்கம்!

Must read

வரிகள், நுகர்வுப்பொருட்கள் பலவற்றின் விலையை உயர்த்துகின்றன என்பதை அமெரிக்காவில் உள்ள பலர் உணர்ந்து வருவதாக Ontario வின் Economic Development, Job Creation and Trade அமைச்சர் Vic Fedeli கூறுகிறார்.

அத்துடன் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Ronald Reagan வரிகளுக்கு எதிராகப் பேசுவதைக் காட்டும் Ontario வின் விளம்பரம் இவற்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது என்றும் Fedeli கூறினார்.

கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டு, விளம்பரத்தை காரணமாக வைத்து 10 சதவீத மேலதிக வரிகளையும் விதித்த அமெரிக்க அதிபர் Donald Trump முதல்வர் Doug Ford இனையும் கடுமையாக விமர்சித்தார்.

அமெரிக்கர்கள் தங்களுடைய மிகவும் அன்பான முன்னாள் ஜனாதிபதி Ronald Reagan, அந்த வரிகள் ஒரு நாட்டிற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பது குறித்து மிகத் தெளிவாக இருந்தார் என்பதை அமெரிக்கர்கள் அறிய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், என Fedeli கூறினார்.

இந்நிலையில், சில நாட்களுக்குப் பின்னர், Trump தனது போக்கை மாற்றிக்கொண்டார். கனடாவில் உள்ள வரிகளை அகற்றுவதற்காக இந்த வாரம் வாக்களித்த அவரது குடிமக்கள், அவரது சொந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், அவரது சொந்த செனட் உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து அவர் கேட்டுக்கொள்கிறார் என்பதான் உண்மையில் மாற்றம். நான்கு குடியரசுக் கட்சியினர் அதுவும் அவரது சொந்த செனட்டர்கள் அவற்றை அகற்றுவதற்காக ஒரு ஜனநாயகக் கட்சித் தீர்மானத்தை ஆதரித்தனர். இவை அனைத்தும் அமெரிக்காவில் நாங்கள் செய்த விளம்பரத்தின் சக்தியின் விளைவாகும். என்று அமைச்சர் Fedeli சுட்டிக்காட்டினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article