6.6 C
Scarborough

வரவுசெலவுத்திட்டம் நிதிக்கான முதல்வர்கள் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்பதை காட்டுகிறது!

Must read

வரும் ஆண்டுகளில் அதிக சுகாதாரப் பாதுகாப்பு நிதிக்காக மாகாண முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்த இடமில்லை என்பதை மத்தியரசின் வரவுசெலவுத்திட்டம் சமிக்ஞை செய்கிறது என்று கூறும் கனேடிய பொருளாதார நிபுணர் ஒருவர், Ontario அரசாங்கம் அதனை மாற்ற வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றார்.

இதன்படி, கனடாவின் சுகாதார ஒதுக்கீடு 2025-26 ஆம் ஆண்டில் $54.7 பில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது மற்றும் 2028 வரை ஆண்டுக்கு ஐந்து சதவீதம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதாரம் மற்றும் சமூக ஒதுக்கீடுகள் ஆகியவற்றிற்கு இடையிலான சமனிலைகள் மாறப்போவதில்லை என்பது வரவுசெலவுத்திட்டத்தில் இருந்து வரும் சமிக்ஞையாக தெரிகிறது. இதனால் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை, என்று Ottawa பல்கலைக்கழகத்தின் நிதி ஆய்வுகள் மற்றும் ஜனநாயக நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் Mostafa Askari கூறினார்.

Canadian Union of Public Employees இன் வரவுசெலவுத்திட்ட பகுப்பாய்வின் படி அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாகாணம் மற்றும் பிராந்தியங்களின் சுகாதார வரவு செலவுத் திட்டங்களுக்குச் செல்லும் மத்தியரசு நிதியின் ஒட்டுமொத்த பங்களிப்பும் குறையும் என்று கூறுகிறது.

பணவீக்கம் மற்றும் வயோதிபர்களின் தொகை ஆகியவை சேவை நிலைகளைப் பராமரிப்பதற்கான செலவவை அதிகரிக்கும். இதனால், உண்மையான செலவு பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பை விட அதிகமாக இருக்கும் என்றும் பகுப்பாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

Ottawa சுகாதார நிதியை உள்ளடக்கிய அளவானது முதலமைச்சர்களுக்கு ஒரு நீண்டகால கவலையாக இருந்து வருகிறது. அதற்கமைய அவர்கள் கூட்டமைப்பு சபையை பயன்படுத்தி அதன்மூலம் மத்திய அரசு கூடுதல் நிதியை பொறுப்பெடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இதனிடையே, வரவிருக்கும் ஆண்டுகளில் பில்லியன் கணக்கான டொலர் சுகாதார நிதி ஒப்பந்தங்கள் காலாவதியாகவுள்ளன என்றும் வரவுசெலவுத்திட்டம் குறிப்பிடுகிறது, இதில் மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுடனான இருதரப்பு ஒப்பந்தங்களுக்கு ஆண்டுக்கு $2.5 பில்லியன் மற்றும் வீட்டு பராமரிப்பு, மனநலம் மற்றும் போதைப்பொருட்களுக்கு $1.2 பில்லியன் ஆகியவை அடங்கும். அந்த நிதி ஒப்பந்தங்கள் 2027 இல் காலாவதியாகின்றன, அதே நேரத்தில் நீண்டகால பராமரிப்புக்கான $600 மில்லியன் பரிமாற்றம் 2028 இல் காலாவதியாகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article