15.4 C
Scarborough

வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான மாதம் ‘ஜனவரி’

Must read

உலகின் மிக வெப்பமான ஆண்டாக 2024 பதிவானது. இந்நிலையில் 2025 அந்த சாதனையை முறியடிக்க உள்ளது. ஆண்டில் தொடக்கத்திலேயே அதற்கான முன்னறிவிப்பாக ஜனவரி மாதத்தின் சாதனை அமைந்துள்ளது.

ஐரோப்பிய யூனியன் நிதியுதவி பெற்ற கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற ஆய்வு நிறுவனம்(C3S) நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி ஜனவரி 2025 உலக வரலாற்றில் மிக வெப்பமான மாதமாக பதிவாகியுள்ளது.

2025 ஜனவரியில் உலக வெப்பநிலையை தணிக்கக் கூடிய ‘லா நினோ’ வளிமண்டலப் போக்கு நிலவினாலும், புவியின் வெப்பநிலை இதுவரை எந்தவொரு ஜனவரி மாதமும் இல்லாத அளவில் பதிவாகியுள்ளது

2025 ஜனவரி மாதத்தில் சராசரி வெப்பநிலை, தொழில்துறை புரட்சிக்கு முன் (1850 க்கு முன்) பூமியின் சராசரி வெப்பநிலையை விட 1.75 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. 1991-2000 ஜனவரி சராசரி வெப்பநிலையை விட 2025 ஜனவரி சராசரி வெப்பநிலை 0.79 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது.

ஆர்க்டிக் கடல் பனி ஜனவரி மாதத்திற்கான மிகக் குறைந்த அளவை எட்டியது. இது சராசரியை விட 6% குறைவாகும். “ஜனவரி 2025 விசித்திரனமான மாதம்” என்று C3S இன் துணை இயக்குநர் சமந்தா பர்கெஸ் தெரிவித்துள்ளார்..

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article