17.6 C
Scarborough

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண குழுவொன்றை அமைக்க தீர்மானம் – ரவிகரன் எம்.பி.

Must read

வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குழுவொன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்  தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் 24.01.2025 இன்று வடமாகாண எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடமாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகளுக்கும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கப் பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாகவும் இக் கலந்துரையாடலிலேயே இவ்வாறு குழு ஒன்றை அமைப்பதற்கான  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும்  அவர்தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இக்கலந்துரையாடலில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள் மற்றும், உள்ளூர் மீனவர்களால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு அத்துமீறி எல்லைதாண்டிவரும் இந்திய இழுவைமடித் தொழில்களால் வடபகுதியைச் சேர்ந்த சிறுதொழிலாளர்கள் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்புகின்றமைதொடர்பான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டது.

இந் நிலையிலேயே வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, அவற்றைத் தீர்ப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி குழுவொன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article