16.1 C
Scarborough

வடக்கிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்ட ஐக்கிய அமெரிக்கத் தூதரகக் குழு!

Must read

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அலுவலர் கெவின் பிரைஸ் தலைமையிலான குழுவினர் இன்று வடக்கிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இந்தக் குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் மேற்கொண்டு துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடன் கலந்துரையாடினர்.

அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அலுவலர் கெவின் பிரைஸ், அரசியல் நிபுணர்களான நஸ்றின் மரிக்கார் மற்றும் சரித்த பெர்ணாண்டோ ஆகியோரே இன்று நண்பகல் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர்.

துணைவேந்தர் பேராசிரியரைச் சந்தித்து வடக்கு நிலைமைகளைக் கேட்டறிந்த தூதரகக் குழுவினர், தொடர்ந்து பீடாதிபதிகள் மற்றும் அலுவலர்களுடன் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பின் போது பல்கலைக்கழகப் பதிவாளர், நிதியாளர் மற்றும் பீடாதிபதிகள் கலந்து கொண்டனர்.

வடக்குக்கு மூன்று நாள்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்கத் தூதரகக் குழுவினர் காங்கேசன்துறையில் அமைந்துள்ள துறைமுகங்கள் அதிகாரசபையின் வதிவிட முகாமையாளர் மற்றும் இலங்கைக் கடற்படையின் வடபிராந்திய அதிகாரிகளுடனும், மன்னாரில் அமைந்துள்ள வலுசக்தி அமைச்சின் காற்றாலை மின்னுற்பத்தி செயற்றிட்ட அதிகாரிகளையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரையும் சந்தித்துக் கலந்துரையாடத் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article