யுக்ரைனுக்கு நேட்டோ உறுப்புரிமை வழங்கப்படுமாயின் தாம் எந்த நேரத்திலும் பதவி விலகத் தயாராக உள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் இதனைக் குறிப்பிட்ட அவர் பல தசாப்தங்களுக்கு தாம் ஆட்சியில் நீடிப்பதற்கு எதிர்பார்க்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
யுக்ரைன் ஜனாதிபதியை ஒரு சர்வாதிகாரி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் விமர்சித்தமைக்கு பதிலளிக்கும் விதமாக வோலோடிமிர் செலென்ஸ்கி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கப்பட்டதன் பின்னர், இராணுவச் சட்டம் விதிக்கப்பட்டதால் யுக்ரைனில் தேர்தல்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.