சீனாவின் “சகோதர பாசம்” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள், இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது இன்று (10) யாழ். மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட செயலாளர் பிரதீபன் மற்றும் சீன தூதரகத்தின் உயரதிகாரிகள் பிரதேச செயலகர்கள் துறைசார் அதிகாரிகள் என கலந்து கொண்டதுடன் 1,070 குடும்பங்களுக்கு தலா 6,490 ரூபா பெறுமதியான பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.