20.7 C
Scarborough

யாழில் ஆலயம் ஒன்றில் 2 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையான மாம்பழம்!

Must read

யாழ்ப்பாணம் புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தின் வருடாந்த  திருவிழாவின் 5 நாள் மாம்பழத் திருவிழாவில் ஏலம் விடப்பட்ட மாம்பழம் ஒன்று 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையாகியுள்ளது.

கடந்த 22.01.2025.அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவத்தில் 26.01.2025 அன்று ஜந்தாம் நாள் மாம்பழத் திருவிழா இடம்பெற்றது..

இங்கு விசேட அபிசேக ஆராதனை தொடர்ந்து முருகப்பெருமான் உள்வீதி, வெளிவீதியூடாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 

இதனை தொடர்ந்து ஒரு மாம்பழம் 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் ஜெயசந்திரன் குடும்பத்தினரே இவ் மாம்பழத்தினை பெற்றனர்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article