மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டி விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்துச் சம்பவம் (5) செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
துவிச்சக்கர வண்டியில் பயணித்த 86 வயதுடைய வயோதிபர் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இதில், காயமடைந்த வயோதிபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.