5.3 C
Scarborough

மோடியை புகழ்ந்த ட்ரம்ப்- இஸ்ரேல் – கமாஸ் போர் நிறுத்த ஒப்பந்த நிகழ்வில் சம்பவம்

Must read

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம், மேற்கொண்ட முயற்சியினால் இஸ்ரேல் – கமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பின்னர், இந்தியா – பாகிஸ்தான் தொடர்பாக பேசப்பட்டதாக பிபிசி உலக செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

எகிப்து நாட்டில் நடைபெற்ற இஸ்ரேல் -கமாஸ் போர் நிறுத்த ஒப்பந்த நிகழ்வில் டொனால்ட் ட்ரம்ப்புடன் எகிப்து, கட்டார், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

நிகழ்வின்போது ட்ரம், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைக் குறிப்பிடாமல், “இந்தியா ஒரு சிறந்த நாடு, அங்கு அதிகார சமநிலையில் தனது நல்ல நண்பர் ஒருவர் இருப்பதாக கூறி புகழ்ந்தார்.

மோடி பற்றியே ட்ரம்ப் கூறுவதாக நிகழ்வில் பங்குபற்றிய தலைவர்கள் உணர்ந்து கொண்டனர். ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பங்குபற்றியிருந்தார்.

பிரதமர் மோடியின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் ட்ரம்ப் புகழ்ந்தபோது, அருகில் நின்ற பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிஃப் சிரித்தபடி நின்றார்.

இந்தியாவின் பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா – பாகிஸ்தான் மோதல் ஆரம்பித்தது. இன்று வரையும் கசப்பான உறவு காணப்படும் நிலையில், பாகிஸ்தானுடன் ட்ரம்ப் நிர்வாகம் நெருக்கமான உறவை பேணி வருகின்றது.

அதேநேரம் இஸ்ரேல் – கமாஸ் போர் நிறுத்த வரலாற்று ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்பதாகவும் இது பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை இது ஏற்படுத்தும் என் நம்புவதாகவும் என்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் காசா மீது கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வந்ததை இந்தியா கண்டித்திருக்காத நிலையில, ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளது.

இஸ்ரேலுக்கு ஆதரவான போக்கை கடைப்பித்து வந்த இந்தியா, தற்போது அமெரிக்கா மேற்கொண்ட சமாதான முயற்சியில் பங்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article