Ottawa வில் இன்று பிரதமரைச் சந்தித்த பின்னர், மேற்கு கடற்கரை குழாய்த்திட்ட சாத்தியக்கூறுகள் குறித்து பகிர்ந்து கொள்ள புதிய தகவல்கள் எதுவும் இல்லை என்று Alberta முதல்வர் Danielle Smith மற்றும் British Columbia முதல்வர் David Eby ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்த முன்மொழியப்பட்ட குழாய்த்திட்டம் Eby யின் கோபத்தைத் தூண்டியுள்ளது. எந்தவொரு தனியார் நிறுவனமும் இதற்கு நிதியளிக்க முன்வராத நிலையில், இந்தத் திட்டமும் அதற்கான Smith இன் அவசரமும் முதிர்ச்சியற்றது என்று அவர் விமர்சித்துள்ளார்.
Alberta மாகாண அரசாங்கம் இந்த முன்மொழிவை மத்திய அரசின் முக்கிய திட்ட அலுவலகத்திடம் (federal major projects office) சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருப்பதாக Smith கூறுகிறார்.
இருப்பினும், இந்தத் திட்டம் முன்னேறும் போது அதுகுறித்த புதிய தகவல்களை Eby க்கு தொடர்ந்து வழங்குவதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
குழாய்த்திட்டம் குறித்து தனக்கு இன்னும் கவலைகள் இருப்பதாக Eby கூறுகிறார், ஆனால் அதே வேளையில், மின் இணைப்புத் திட்டங்கள் போன்ற ஏனைய திட்டங்களில் இரு மாகாணங்களும் இணைந்து செயல்பட முடியும் என்று அவர் நம்புகிறார். கடந்த ஆண்டின் இறுதியில் பிரதமர் Smith உடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அங்கமாக இந்தக் குழாய்த்திட்டம் அமைகிறது.

