15.4 C
Scarborough

மெட்டா நிறுவனத்திலிருந்து 3,000 பேரை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை

Must read

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை நிர்வகித்து வரும் மெட்டா நிறுவனம் 3,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவிருக்கிறது.

உலகின் மிகப்பெரிய சமுகவலைத்தளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் தனது உலகளாவிய ஊழியர்களில்  3000 பேரை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை தொடங்க உள்ளது. ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நாளை(09) முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை மெட்டா நிறுவனத்தின் மனிதவள துணைத்தலைவர் ஜெனெல் கேல் வெளியிட்டுள்ளார்.

மெட்டா நிறுவனத்தில் 72,000 பேர் பணிபுரிகின்றனர். அதில் குறைந்த செயல் திறன் கொண்ட 5 சதவீத( கிட்டத்தட்ட 3,000)ஊழியர்கள் இந்த நடவடிக்கையினால் பாதிக்கப்படுவர்.

ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டும் ஆட்குறைப்பால் பாதிக்கப்படமாட்டார்கள். ஆனால் ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கக் கண்டங்களில் உள்ளோர் இம்மாதம் 11ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை ஆட்குறைப்பு அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article