15.4 C
Scarborough

மும்பை அணி கேப்டன் பதவியில் இருந்து ரஹானே விலகல்!

Must read

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளார் இந்திய பேட்ஸ்மேனான அஜிங்க்ய ரஹானே.

37 வயதான ரஹானே 201 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 14 ஆயிரம் ரன்கள் குவித்துள்ளார். கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் மும்பை அணியில் பேட்ஸ்மேனாக தொடர்வேன் எனவும் ரஹானே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ரஹானே தனது எக்ஸ் வலைதள பதி​வில், “மும்பை அணி​யின் கேப்​ட​னாக இருந்து சாம்​பியன் பட்​டங்​கள் வென்​றது பெரிய கவுர​வம். உள்​ளூர் சீசன் வரவிருக்​கும் நிலை​யில், புதிய கேப்​டனை தேர்வு செய்ய இதுவே சரி​யான நேரம் என்று நான் நம்​பு​கிறேன், எனவே, கேப்​டன் பதவி​யில் தொடர வேண்​டாம் என்று முடிவு செய்​துள்​ளேன்.

ஒரு வீர​ராக எனது சிறந்த பங்​களிப்பை வழங்​கு​வ​தில் நான் முழு​மை​யாக உறு​தி​யாக இருக்​கிறேன். மேலும் பல கோப்​பைகளை வெல்ல உதவுவதற்​காக மும்பை அணி​யுடன் ‘எனது பயணத்​தைத் தொடரு​வேன். வரவிருக்​கும் சீசனை ஆவலுடன் எதிர்​நோக்கி உள்​ளேன்” எனத் தெரி​வித்​துள்​ளார். ரஞ்சி கோப்பை சீசன் வரும் அக்​டோபர் 15-ல் தொடங்​கு​கிறது. மும்பை அணி தனது முதல் ஆட்​டத்​தில் ஜம்மு & காஷ்மீர் அணி​யுடன் மோதுகிறது.

ரஹானே தலை​மை​யில் மும்பை அணி 2023–24–ம் ஆண்டு ரஞ்சி கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் விதர்பா அணியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றிருந்​தது. மேலும் 2024–25–ம் ஆண்​டில் இரானி கோப்​பையை வென்ற மும்பை அணி​யை​யும் ரஹானே சிறப்​பாக வழிநடத்​தி​யிருந்​தார். 2022–23–ம் ஆண்​டில் நடை​பெற்ற சையது முஸ்​டாக் அலி டி 20 தொடரிலும் ரஹானே தலை​மையி​லான மும்பை அணி சாம்​பியன் பட்​டம் வென்​றிருந்​தது.

2021-ம் ஆண்டு ஆஸ்​திரேலிய சுற்​றுப்​பயணத்​தில் இந்​திய அணி டெஸ்ட் தொடரை வென்​ற​தில் ரஹானே​வின் கேப்​டன்​ஷிப் முக்​கிய பங்கு வகித்​திருந்​தது. ஆனால் தற்​போது அவர், தேசிய தேர்​வாளர்​களின் பார்​வை​யில் இல்​லை. எனினும், இந்​திய அணி​யில் மீண்​டும் இடம் பிடிப்​ப​தில் ரஹானே உறு​தி​யாக உள்​ளார்.

இது​வரை 85 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடி உள்ள ரஹானே, கடைசி​யாக 2023-ம் ஆண்டு ஜூலை​யில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ராக நடை​பெற்ற டெஸ்ட் போட்​டி​யில் களமிறங்​கி​யிருந்​தார். 90 ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி, 20 டி20 ஆட்​டங்​களி​லும் இந்​தி​ய அணிக்​காக விளை​யாடி உள்​ளார்​ ரஹானே.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article