2.8 C
Scarborough

முத்தரப்பு டி20 தொடர்-இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

Must read

பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே, ஆகிய 3 அணிகள் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 128 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக ஜனித் லியானகே ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 3 விக்கெட் கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா பர்ஹான் ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் (45 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

3 விக்கெட்டுகள் வீழ்த்திய பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2-வது ஆட்டத்தில் ஆடிய பாகிஸ்தான் அணி 2-வது வெற்றியை பெற்றது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஜிம்பாப்வே (மாலை 6.30 மணி) அணிகள் மோதுகின்றன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article