15.5 C
Scarborough

மார்பக புற்றுநோய்க் கட்டிகளை ஒரே தடவையில் கரைக்கும் மருந்து கண்டுபிடிப்பு

Must read

மார்பகத்தில் ஏற்படும் சிறிய புற்றுநோய்க் கட்டிகளைக் கரைக்கும் மற்றும் பெரிய கட்டிகளை சுருக்கும் வல்லமைகொண்ட ஒரே தவணையாகக் கொடுக்கும் மருந்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த மருந்துக்கு பக்கவிளைவுகள் இல்லை. ஏசிஎஸ் மத்திய அறிவியல் என்ற மருத்துவ இதழில், நேற்று (22) வெளியிடப்பட்ட அறிவியல் ஆய்வுக் கட்டுரையில், அறிவியல் விஞ்ஞானிகள் இந்த புதிய கண்டுபிடிப்புக் குறித்து தங்களது விவாதங்களை முன்வைத்துள்ளனர்.

அறிவியல் விஞ்ஞானி பால் ஹர்ஜென்ரோதர் மற்றும் சக விஞ்ஞானிகள் குழுவினர், ஏற்கனவே, புற்றுநோய் செல்களைக் கொல்லும் எர்சோ (ErSO) என்ற சிறிய மூலக்கூறினை கண்டறிந்தனர். ஆனால், இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தியது. 2022ஆம் ஆண்டில், ஆய்வாளர்கள், ஒருங்கிணைக்கப்பட்ட எர்சோ போன்றதொரு சிறு மூலக்கூறுகளை வைத்து தொடர்ச்சியாக நடத்திய ஆய்வில், அதிக திறன் கொண்ட சிறுமூலக்கூறுவைக் கண்டறிந்துள்ளனர்.

அந்த ஆய்வின் இறுதியில், எர்சோ-டிஎஃப்பிஒய் (ErSO – TFPy) என்ற ஒரு சிறந்த சிறு மூலக்கூறு உருவாக்கப்பட்டு, அது மார்பகப் புற்றுநோய் கட்டிக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்படுவதையும் கண்டறிந்துள்ளனர். மார்பகப் புற்றுநோய்க் கட்டிகளை உருவாக்கும் இஆர்+ (ER+) என்ற செல்களை அழிப்பதோடு, அவை பல்கிப் பெருகுவதைக் கட்டுப்படுத்துவதோடு, மிகப்பெரிய அளவிலான பக்கவிளைவுகள் ஏதுமின்றி இருப்பதும் எலி, பூனை, நாய்களிடம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article