14 C
Scarborough

மனிடோபாவில் ஆயுதங்களுடன் ஐவர் கைது!

Must read

கனடாவின் வின்னிப்பெக் நகர மற்றும் மனிடோபா மாகாண அரசியல் காவல்துறை (RCMP) இணைந்து நடத்திய விசாரணையின் விளைவாக, ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பெரிய அளவிலான கொக்கெயின் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

‘ப்ராஜெக்ட் குவாரி’ என்ற குற்றவியல் விசாரணை கடந்த 2024 நவம்பரில் தொடங்கப்பட்டது.

இது மனிடோபாவில் உள்ள போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிச் சரக்குக் கடத்தல் நடவடிக்கைகளை குறிவைத்து நடத்தப்பட்டது.

2025 மார்ச் 17 முதல் 19 வரை, வின்னிப்பெக், ஸ்டோன்வால், மற்றும் ராக்வுட் பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில்: 30 துப்பாக்கிகள், கிட்டத்தட்ட 60,000 டொலர்கள் மதிப்புள்ள கொக்கெயின் மற்றும் ஹைட்ரோமார்போன் (Hydromorphone) போதைப்பொருள் என்பன பறிமுதல் செய்யப்பட்டது.

ஒரே இடத்தில் இவ்வளவு எண்ணிக்கையிலான ஆயுதங்களை பறிமுதல் செய்வது மிகவும் கவலையளிக்கிறது, குறிப்பாக இவை கும்பல்களில் தொடர்புடையவர்களுக்கு எளிதாக கிடைக்கக்கூடிய நிலையில் இருந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்களுக்கு எதிராக மொத்தம் 53 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணை தொடருகின்ற நிலையில், மேலும் கைது நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article