மகிழ் திருமேனி இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ படத்தினை கடைசியாக இயக்கியிருந்தார் மகிழ் திருமேனி. அப்படம் போதிய வரவேற்பினைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான பணிகளை கவனித்து வந்தார். தற்போது அதனை மிராக்கிள் மூவிஸ் என்ற மும்பை நிறுவனம் தயாரிக்க முன்வந்திருப்பதாக தெரிகிறது.
இதில் நாயகனாக விஜய் சேதுபதி, நாயகியாக ஷ்ரத்தா கபூர், வில்லனாக சஞ்சய் தத் ஆகியோர் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இன்னும் அதிகாரபூர்வமாக கையெழுத்தாகவில்லை. இப்படத்தினை தமிழ் மற்றும் இந்தி என இருமொழிகளிலும் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார் மகிழ் திருமேனி. இறுதிகட்டப் பேச்சுவார்த்தைக்கு பின்பு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது.

