12.9 C
Scarborough

போபாலில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் அகற்றப்பட்ட 377 தொன் விஷ வாயு கழிவுகள்

Must read

இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தியிருந்த போபால் விஷ வாயுக்கசிவு சம்பவம் ஏற்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது குறித்த ஆலையிலிருந்து 377 மெட்ரிக் தொன் விஷ நச்சுக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய பிரதேசத்தின் போபாலில் அமைந்துள்ள யூனியன் கார்பைட் பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலையில் 1984ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் திகதி விஷயவாயு கசிவு ஏற்பட்டது. மிகவும் கோரமான இந்தச் சம்பவத்தில் 5,479 பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர, உடல் உறுப்புகளை இழந்து நிரந்தர சுகாதாரப் பிரச்சினைகளால் ஐந்து இலட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த தொழிற்சாலை மூடப்பட்டது.

இந்நிலையில், குறித்த ஆலையிலுள்ள 3 இலட்சத்து 77 ஆயிரம் கிலோ கழிவுகளை அகற்றுவது தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வந்த நிலையில், இது தொடர்பாக விசாரித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், மாநில அரசு சரியான நடவடிக்கை எடுக்காததற்குக் கண்டனம் தெரிவித்தது. உடனடியாக அந்தக் கழிவுகளை அகற்றி, அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, போபாலிலிருந்து 250 கி.மீ. தொலைவில் இந்தூருக்கு அருகேயுள்ள பீதாம்புரிலுள்ள கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையத்தில் இந்தக் கழிவுகளை அகற்ற முடிவுசெய்யப் பட்டுள்ளது. இதனையடுத்து முழு கவச உடை அணிந்த போபால் மாநகராட்சி, சுற்றுச்சூழல் அமைப்பு உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் முன்னிலையில் கழிவுகள் அகற்றப்பட்டு பல பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய 12 ட்ரெக்குகளில் அவை எடுத்துச் செல்லப்பட்டன.

கடுமையான அறிவியல் நெறிமுறைகளை யும் பின்பற்றி எரிப்பு செயல்முறை நடைபெற விருக்கிறது. 337 தொன் நச்சுக் கழிவை மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் அழித்தால், மூன்று முதல் ஒன்பது மாதங்களுக்குள் கழிவுகள் எரிக்கப்படுமென்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், பிதாம்பூர் மற்றும் இந்தூரிலுள்ள உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது உள்ளூர் சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளை மாசுபடுத்தும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். பிதாம்பூரிலுள்ள கழிவுகளை எரிக்கும் ஆலை மிக அதிநவீன ஆலையாகும். ஆலையின் தரைமட்டத்திலிருந்து 25 அடி உயரத்துக்கு மேல் சிறப்பு பிளாட்பார்ம் அமைக்கப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article