இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண் வரவேற்பாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் நீச்சல் குளத்தில் நீந்த வேண்டாமென பெண் வரவேற்பாளர் தெரிவித்ததை அடுத்து, எதிர்ப்புத் தெரிவித்த வெளிநாட்டு குழுவினர் அந்தப் பெண்ணை நீச்சல் குளத்திற்குள் தள்ளிவிட்டுள்ளனர்.
விடுதி நிர்வாகம் இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர்களிடம் கேட்டறிய முற்பட்ட வேளையில், அவர்கள் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.