டித்வா புயலையடுத்து ஏற்பட்ட பேரிடரால் இலங்கையின் சுகாதார கட்டமைப்புக்கு 21 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுகாதார சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்காக 62 பல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (29) நடைபெற்றது.
இந்நிகழ்வில்கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
“ டித்வா புலயால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு 4.1 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டின் சுகாதார அமைப்பும் 21 பில்லியன் ரூபா இழப்பைச் சந்தித்துள்ளது. வைத்தியசாலைகள் உட்பட 8 சுகாதார நிறுவனங்களை மாற்ற வேண்டியுள்ளது.
சிலாபம் மாவட்ட வைத்தியசாலை மற்றும் மஹியங்கனை அடிப்படை வைத்தியசாலை போன்ற வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு கணிசமான அளவு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.” – எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

