2.8 C
Scarborough

புது வருடத்திலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாக்குறுதியளித்த நிவாரணங்களை முறையாகப் பெற்றுக் கொடுங்கள் – சஜித் வலியுறுத்தல்!

Must read

ஜனவரி 1 ஆம் திகதி புது வருடத்தை ஆரவாரத்துடன் வைபவங்களை நடத்தி கொண்டாடினால் பரவாயில்லை, என்றாலும் டித்வா சூறாவளிப் புயலால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல இறப்புகள் நடந்துள்ளன. பலர் காணாமல் போயுள்ளனர். இந்த விடயங்களை நாம் மறந்துவிடக் கூடாது. சில வாரங்களுக்கு முன்பு நடந்த துயர் மிகு நிலையை நாம் மறந்துவிடக் கூடாது. நாம் முன்னெடுக்கும் இந்த திட்டங்கள் அவசரகால நிவாரணத் திட்டங்கள் அல்ல.

மாறாக அரச அதிகாரம் இல்லாமல் குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்டகால திட்டங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளாக நாம் இந்த வைத்தியசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கி வருகிறோம். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், பாதிக்கப்பட்டவர்களும், வேலையில்லாமலும், வறுமையாலும் பாதிக்கப்பட்டவர்கள் காணப்படுகின்றனர்.

இவ்வாறு மௌனம் காத்திருக்கும் இந்த பெரும்பான்மையை நாம் மறந்துவிட்டுச் செயற்படக் கூடாது. இந்த புத்தாண்டிலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாக்குறுதியளித்த சகல நிவாரணங்களையும் உரிய முறையில் வழங்கி வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ், கரவனெல்ல ஆதார வைத்தியசாலைக்கு 28 இலட்சம் ரூபா மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (01) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

Patient Monitor 5 ம், Syringe Pump ஒன்றும், Infusion Pump ஒன்றும் இன்று இவ்வாறு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

2000-2019 க்கு இடையில் 9 நாடுகளில் 217 சூறாவளிப் புயல்கள் மற்றும் 15 மில்லியன் இறப்புகள் குறித்து அவுஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவுகளின்படி, சூறாவளியின் போது இறந்தவர்களின் எண்ணிக்கையை விட, சூறாவளிக்குப் பின்னரான காலப்பகுதியில் நடக்கும் இறப்புகளின் எண்ணிக்கைகள் அதிகம் என தெரிவிக்கின்றன.

வைத்தியசாலைக் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளும் மருத்துவத் துறையின் வீழ்ச்சியுமே இதற்கு காரணம் என்று கூறப்படுகின்றன. இதுபோன்ற நிலை நமது நாட்டிலும் ஏற்படாமல் தடுப்பதற்கும், எதிர்க்கட்சியால் பெற்றுத் தர முடியுமான பங்களிப்பைப் பெற்றுத் தரும் பொருட்டும் ஐக்கிய மக்கள் சக்தி இந்த மூச்சுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

500 மில்லியன் மதிப்பீடும், குறைநிரப்பு மதிப்பீடும் கூட காணப்படுகின்றன. ஆகையால் 50 இலட்சம், 10 இலட்சம், 100 இலட்சம் என அட்டவணைப்படுத்தப்பட்ட விதத்தில் வழங்கி நிவாரண வாக்குறுதிகளை வலுவான பொறிமுறையொன்றின் ஊடாக வினைத்திறனாக பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டின் இடர் முகாமைத்துவ திட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். புத்தாண்டிலாவது இடர் முகாமைத்துவ விடயத்தை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சாக மாற்றி, இதன் கீழ் புதிய நிறுவனங்களை தாபித்து, நிதி, பௌதீக மற்றும் மனித வளங்களை இவற்றுக்குப் பெற்றுக் கொடுத்து, வினைத்திறனான இடர் முகாமைத்துவ வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும் என்று என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article