16.1 C
Scarborough

பிரேசிலில் மேம்பாலம் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

Must read

பிரேசிலில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.

பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள டோகன்டின் ஆற்றின் மீது உள்ள மேம்பாலம், கடந்த டிசம்பர் மாதம்.,22ம் திகதி திடீரென இடிந்து விழுந்தது. இச்சம்பவம் இடம்பெற்றபோது, குறித்த மேம்பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்த, 3 லொறிகள் உட்பட 10 வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் சிக்கியவர்களை, ஆற்றில் இருந்து மீட்கும் பணியில் கடற்படையினரின் உதவியுடன் பொலிஸார் ஈடுபட்டனர்.

 

இதுவரையில் 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளன. மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

இரசாயன லொறி ஆற்றில் விழுந்ததால்,நீரில் ஏதாவது இரசாயனங்கள் கலந்து விட்டதா? என்று அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். ஆனால், தேசிய நீர் வழங்கல் முகவரகம் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என்று கூறியுள்ளது. குறித்த விபத்து தொடர்பாக தேசிய போக்குவரத்து உட்கட்டமைப்புக்கான இயக்குநரகம் விசாரணைகளை நடத்தி வருகின்றது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article