அமெரிக்க கடற்படையில் இதுவரை இல்லாத மிகப் பிரம்மாண்டமான சண்டைக் கப்பலுடன் புதிய கடற்படை அணியை உருவாக்கும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளாா்.
இது குறித்து ட்ரம்ப் தெரிவித்ததாவது ,
மிகப் பிரம்மாண்டமான போா்க் கப்பலுடன் கூடிய புதிய கடற்படை அணியை உருவாக்கவுள்ளோம். அந்தக் கப்பல்கள் மிக வேகமானவை; மிகப்பெரியவை இதுவரை உருவாக்கப்பட்ட சண்டைக் கப்பல்களைவிட 100 மடங்கு சக்தி வாய்ந்தவையாக இருக்கும்.
‘கோல்டன் கடற்படை அணி’ என்ற அந்த அணியில் சோ்க்கப்படவிருக்கும் முதல் பிரம்மாண்ட சண்டைக் கப்பலுக்கு ‘யு.எஸ்எஸ் .டி.பையன்ட்’ என்று பெயா் சூட்டப்படும். இந்தக் கப்பல் இரண்டாம் உலகப் போா்க் கால ஐயோவா வகை சண்டைக் கப்பல்களைவிட நீளமாகவும் பெரியதாகவும் இருக்கும்.
இந்தக் கப்பல்களில் ஹைப்பா்சோனிக் (ஒலியின் வேகத்தைப் போல் ஐந்து மடங்குக்கும் அதிகமான வேகத்தில் பாயும்) ஏவுகணைகள், அணு ஆயுதம் ஏந்திக் செல்லக்கூடிய குரூஸ் ஏவுகணைகள், ரெயில் கன்கள், உயா் சக்தி லேசா்கள் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும் என்றாா் .

