சிறுவர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்காக கனடியர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. கனடாவின் சஸ்காட்செவான் மாகாணத்தைச் சேர்ந்த 32 வயதான மெத்தூ நார்மன் பாலெக் என்பவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை நேரடியாக பாதிக்கும் பாலியல் வன்கொடுமை வீடியோக்களை எஃப்பிபிஐ முகவருக்கு அனுப்பியதற்காக, அமெரிக்கசட்டத்தின் கீழ் 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
வாஷிங்டன் டி.சி. மாவட்ட நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ், 2024 ஜூன் 30ஆம் திகதி, நான்கு ஆண்டுகள் சிறைவாசம் மற்றும் அதன் பின் ஆறு ஆண்டுகள் கண்காணிப்பில் வாழ வேண்டிய தண்டனை, அவர் மீது விதிக்கப்பட்டது.
பாலெக், 2024 ஜனவரியில் ஒரு ஆன்லைன் டேட்டிங் செயலியின் மூலம், எஃப்பிபிஐயின் குழந்தைகள் மீதான தொழில்நுட்ப வன்கொடுமை தடுப்புப் பிரிவில் பணியாற்றும் மறைமுக முகவருடன் தொடர்பு கொண்டு ஆபாச காணொளிகளை பகிர்ந்தார் என குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.