‘பராசக்தி’ எப்போது வெளியீடு என்ற கேள்விக்கு இயக்குநர் சுதா கொங்கரா பதிலளித்துள்ளார். மேலும், இயக்குநர்களில் ஆண் – பெண் என்றெல்லாம் இப்போது பார்ப்பதில்லை என்றார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. இதற்கு ஒளிப்பதிவாளராக ரவி கே சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

