8.5 C
Scarborough

நூற்றாண்டு பழமையான இனுயிட் பழங்குடிக் கலாசாரப் பொருட்கள் கனடாவுக்கு…

Must read

நூற்றாண்டு பழமையான (Inuit) கயாக் (Kayak) எனப்படும் படகு உட்பட 62 விலைமதிப்பற்ற ‘இனுயிட் பழங்குடிக் கலாசாரப் பொருட்கள் வத்திக்கானில் இருந்து கனடாவுக்குத் திரும்பியுள்ளன.

கத்தோலிக்க திருச்சபைக்கும் கனடாவின் பழங்குடி சமூகங்களுக்கும் இடையேயான நல்லிணக்கப் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டும் வகையில் இந்த பொருட்கள் மீள அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பழங்குடிக் கலாசாரப் பொருட்கள் கியூபெக் மாநிலத்தின் கத்தீனோவில் உள்ள கனடிய வரலாற்று அருங்காட்சியகத்தில் (Canadian Museum of History) பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

1925 ஆம் ஆண்டில் போப் பியஸ் XI ஏற்பாடு செய்த கண்காட்சிக்காக, இந்தப் பொருட்கள் வத்திக்கானுக்கு அனுப்பப்பட்டிருந்தன.

மறைந்த போப் பிரான்சிஸ், இந்தப் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவை மீளக்கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article