19.5 C
Scarborough

நாளை முதல் கனடாவில் விலை உயரும் பொருட்கள்!

Must read

ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டல், வெறும் மிரட்டலாக இல்லாமல், நாளை முதல் கனேடிய மக்கள் மீது உண்மையாகவே தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தெந்த பொருட்கள் விலை உயரும்?

ஆக, ட்ரம்பின் வரி விதிப்பால், உடனடியாக எந்தெந்த பொருட்கள் விலை உயரக்கூடும் என்று பார்க்கலாம்.

முதலில் பாதிக்கப்பட இருப்பது மளிகைப்பொருட்கள்தான். அதுவும், குறிப்பாக எளிதில் கெட்டுப்போகக்கூடிய பொருட்கள் விலை அதிகரிக்கலாம்.

ப்ளோரிடா ஆரஞ்சுகள், விஸ்கான்சின் cheddar வகை சீஸ் ஆகியவைதான் முதலில் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் பொருட்கள்.

கனேடியர்கள் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் பாதிக்கும் மேல், குறிப்பாக காய்கறிகள், பழங்கள், அமெரிக்காவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன.

கனேடிய பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவிகிதம் வரிகள் விதிக்கும்போது, அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கனடா வரி விதிக்குமானால், கனேடியர்கள் பயன்படுத்தும் சாலட், லெட்டூஸ் கொண்ட சாண்ட்விச் ஆகியவற்றின் விலை அதிகரிக்கும்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article